மீண்டும் கொரோனா விஸ்வரூபம்.. உச்சம் எட்டிய புதிய அச்சம்..!

0 6133

ஒரே நாளில், அதிகபட்சமாக 10 ஆயிரத்து 956 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உலக அளவில், கொரோனா பாதிப்பின் உச்சம் எட்டிய நாடுகள் வரிசையில் இந்தியா 4- வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், வைரஸ் தொற்று உறுதி
ஆனோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் அதி வேக பாய்ச்சல் காட்டி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 956 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆகி, ஒரே நாளில் 396 பேர், கொரோனாவுக்கு இரை ஆனார்கள்.

மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வருகிறது. தமிழகம் இந்த பட்டியலில் 2- வது இடம் வகிக்கிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்க, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தானில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரா தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வர, இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக் கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. அதேபோல, வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 - ஐ தாண்டி விட்டதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments