உலக கொரோனா பாதிப்பில் 4- வது இடம் நோக்கி செல்கிறது, இந்தியா

0 3580

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்தை நோக்கி, உயர்ந்து வருகிறது. எகிறும் கொரோனா அதிவேக பாய்ச்சல் காட்டுவதால், இன்றிரவுக்குள் உலக அளவில், பாதிக்கப்பட்டோர் நாடுகள் வரிசையில் இந்தியா, 4ஆவது இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

உலக நாடுகளை கிடு கிடுக்க வைத்துள்ள கொரோனா, இந்தியாவையும் ஆட்டிப்படைத்து வருகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை, நாடு முழுவதும் 52 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

ஒரே நாளில், சுமார் 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

உலக அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்தபடியாக 4- வது இடம் வகிக்கும் இங்கிலாந்தில், 2 லட்சத்து 90 ஆயிரம் பேரும், 5- வது இடம் வகிக்கும் ஸ்பெயினில் 2 லட்சத்து 89 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போதைய சூழலில், இந்தியாவுக்கும் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கும் இடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், சொற்ற வித்தியாசமே உள்ளது. எனவே, இன்னும் சில மணி நேரங்களில், அதாவது இன்றிரவுக்குள், உலக அளவில் பாதிக்கப்பட்டோர் நாடுகள் வரிசையில், இந்தியா 4- வது இடத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், அதிக பாதிப்பை சந்தித்துள்ள மஹாராஷ்டிராவில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 94 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகம் இந்த பட்டியலில் 2- வது இடம் வகிக்கிறது.

டெல்லி மற்றும் குஜராத் முறையே 3 மற்றும் 4- வது இடங்களில் உள்ளன.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங் கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 357 பேர் உயிரை கொரோனா, காவு வாங்கி உள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 115 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments