ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி : முதலமைச்சர் குற்றச்சாட்டு

0 2307

ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகக் கூறி விலை பேசுவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் பாஜகவினர் விலைக்கு வாங்கிவிடக் கூடாது என அஞ்சிய காங்கிரஸ் கட்சி, தனது சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேர், சுயேச்சை உறுப்பினர்கள் 13 பேர் என மொத்தம் 120 பேரை ஜெய்ப்பூருக்கு வெளியே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்த்ததுபோல், ராஜஸ்தானில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியையும் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். 200 உறுப்பினர் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 107 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 72 உறுப்பினர்களும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments