55 கால காங்கிரஸ் ஆட்சியால் முடியாததை 5 ஆண்டுகளில் மோடி சாதித்தார்

0 14344

55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியால் செய்ய முடியாததை  மோடி தலைமையிலான அரசு ஐந்து ஆண்டுகளில் சாதித்து காட்டியிருப்பதாக மத்திய  அமைச்சர் நிதிக் கட்கரி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பிரச்சார உத்திகளில் ஒன்றான டிஜிட்டல் ஜன் சம்வாத் உரையை நாக்பூரில் இருந்தவாறு நிகழ்த்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசியவாதத்தின் அடிப்படையில் இயங்கும் மோடி அரசு, மாவோயிஸ்டுகளையும, தீவிரவாதிகளையும் ஒடுக்கி வருவதாக கட்கரி கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையில், நாட்டின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், வாக்கு அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

370 ஆவது பிரிவை அகற்றியது, ராமர் கோயில்  உள்ளிட்டவற்றின் வாயிலாக பாஜக தனது சித்தாந்தத்தில் உறுதியாக இருப்பதாகவும் கட்கரி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments