முக்கவசம் மாட்டி குழந்தையை வைத்து விபரீத விளையாட்டு..! டிக்டாக் குடும்பம் வில்லங்கம்

0 3448

ச்சிளம் குழந்தைக்கு முகத்தை மாஸ்க்கால் மூடியும் வாயில் பெரிய எலும்பு துண்டை வைத்தும் விபரீத டிக்டாக் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் வில்லங்க டிக்டாக் குடும்பம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஓசூரில் டிக்டாக்கிற்கு அடிமையான குடும்பம் ஒன்று தங்கள் வீட்டில் உள்ள பச்சிளம் குழந்தைக்கு டிக்டாக்கில் லைக் வர வேண்டும் என்பதற்காக படாத பாடுபடுத்தி வருகின்றது. முதலில் புட்டியில் பால்குடிக்கும் அந்த பச்சிளம் குழந்தைக்கு உதட்டில் லிப்ஸ்ட்டிக் பூசியிருப்பது போல கிராபிக்ஸ் டிக்டாக் எடுத்து வெளியிட்டனர்.

அதன் பின்னர் தங்கள் வீட்டில் சமைத்த அசைவ உணவில் இருந்து மசாலாவுடன் கூடிய இறைச்சியின் பெரிய எலும்பு துண்டை எடுத்து மல்லாக்க படுக்கவைக்கப்பட்ட குழந்தையின் வாயில் உறிஞ்ச வைத்து வீடியோவாக டிக்டாக்கில் பதிவிட்டனர்.

இந்த சேட்டைக்கெல்லாம் உச்சக்கட்டமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக நினைத்து தங்கள் வீட்டில் உள்ள சிறுவன் மூலமாக அந்த குழந்தையின் முகத்தை துணி மாஸ்க்கால் இழுத்து மூட வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் மூச்சுவிடமுடியாமல் திணறிய குழந்தை அழுக, அந்த சிறுவன் விபரீதம் புரியாமல் சிரித்தபடியே குழந்தைக்கு மாஸ்க்கை மாட்டிவிடுகிறான். சமூக வலைதளங்களில் பரவிவரும் இந்த காட்சிகளை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

டிக்டாக்கில் லைக்கிற்காக குழந்தையை குரங்காக்கி வித்தை காட்டும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இந்த அதிபுத்திசாலி ஆசாமியோ டிக்டாக் சிங்காரிகளுடன் டூயட் பாடி வருகின்றார்..!

இதனை பார்த்து மற்ற டிக்டாக் சீடர்களும், தங்கள் குழந்தைகளை படுத்தி எடுக்கும் முன்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வில்லங்கமான டிக்டாக் குடும்பத்தை கண்டுபிடித்து தக்க பாடம் எடுக்க வேண்டியது அவசியம்..!

சீனாவில் இருந்து வந்த கொரோனா உயிருக்கு கேடு என்றால், டிக்டாக் ஊருக்கே கேடு..! என்பதை உணர்ந்து அதனை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments