ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி

0 3763

ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான 262 கோடி ரூபாய் மதிப்பிலான ஒய் எஸ் ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

தடேப்பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஜகன்மோகன்ரெட்டி, ஆண்டுதோறும் வாகன பிட்னஸ் சான்றிதழ் பெறுவதற்கும் வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தன்னிடம் தெரிவித்திருந்ததாகக் கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் தினந்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறிய ஓட்டுநர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகக் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இத்திட்டத்துக்காக 236 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டதாகவும் இந்த ஆண்டு 262 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளதாகவும் ஜகன்மோகன்ரெட்டி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments