தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்

0 891
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - மு.க.ஸ்டாலின்

ஜூன் மாத ஊரடங்கு காலத்தையாவது முறையாக பயன்படுத்தி தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனையை அதிகப்படுத்துவதே நோய்த்தொற்று பரவலை தடுக்க ஒரே வழி என தெரிந்தும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், வெண்டிலேட்டர் கொள்முதல், மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments