பிரதமர் மோடிக்காக ஆஸி.பிரதமர் தயாரித்த சமோசா மற்றும் சட்னி

0 4719

பிரதமர் மோடியுடன் வரும் 4ஆம் தேதி காணொலியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்தியாவின் பிரபல சிற்றுண்டியான சமோசா மற்றும் சட்னியை தயாரித்து அதை மோடிக்கு அளிக்க விரும்புவதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு ScoMosas என்று ஆஸ்திரேலிய பிரதமர் பெயரிட்டுள்ளார். சமோசா மற்றும் சட்னியுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த டுவிட்டர் பதிவுக்கு 32 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன.

கொரோனாவால் சர்வதேச பயணத் தடைகள் விதிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி நடத்தும் இந்த முதலாவது இருதரப்பு காணொலி உச்சி மாநாட்டில், பாதுகாப்பு, சீனாவுக்குப் பதிலாக புதிய தொழில் மையங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments