வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

0 1876
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்துப் பயிர்களைச் சேதப்படுத்துவதைக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என்றாலும் அதன் தாக்கம் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும் எனச் சூழலியலாளர்கள் கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வெட்டுக்கிளிகளால் இழப்பு ஏற்படும் என்கிற அச்சம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments