வெட்டுக்கிளிகளை வறுத்து சாப்பிட்டு.. தரமான சம்பவம்..! ஒரு கிலோ 1000 ரூபாய்

0 11885

கொரோனாவுக்கு அடுத்த படியாக பயிற்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகளை கண்டு வட இந்தியர்கள் அதிர்ந்து கிடக்கும் நிலையில், வியட்னாம் மற்றும் மலேசியாவில் வயல் வெளியில் வெட்டுக்கிளிகளை வலை விரித்துப்பிடித்து வறுத்து சாப்பிட்டு வரும் ருசிகர சம்பவம் அரங்கேறி வருகின்றது...

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கென்யா எத்தியோப்பியா கடந்து பாகிஸ்தானில் வேட்டையை முடித்து அங்கிருந்து இந்தியாவிற்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் பெருமளவில் பரவிப் பயிர்களை அழித்து வருகிறது.

லட்சக்கணக்கில் சுற்றிப்பறந்து பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி கூட்டத்தை விரட்ட தட்டுக்களை அடித்தும் சத்தம் எழுப்பியும் படாதபட்டு வருகின்றனர் வடமாநில விவசாயிகள். வெட்டுக்கிளிகள் தக்காணபீடபூமியை தாண்டி தமிழகத்திற்குள் வராது என்றும் தமிழக விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அதிகாரிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டின் இறுதியிலேயே ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துவிட்ட வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இதேவெட்டுக்கிளிகளில் மனித உடலில் உள்ள தசைகளை வலுவடைய செய்யும் புரதசத்து மிகுதியாக இருப்பதாலும் விட்டமின் ஏ.பி.சி போன்றவை மிகுதியாக காணப்படுவதாலும், வியட்னாமில் வெட்டுக்கிளிகளை பிடித்து பொறித்து சாப்பிட்டு வருகின்றனர் மக்கள்..!

பச்சை வயலை வேட்டையாட வரும் வெட்டுக்கிளிகளை விரட்டுவதை தவிர்த்து, அவற்றை வலை விரித்து பிடித்து கையோடு எடுத்துச்சென்று உப்பு மிளாய் பூண்டு மசாலா போட்டு வெட்டுக்கிளிகளை வறுத்தும் சாப்பிடுகின்றனர்.

மலேசியாவின் புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ வெட்டுக்கிளி அடங்கிய பை இந்திய மதிப்பில் 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சவுதி அரேபியாவில் வெட்டுக்கிளிகளை கிரில் சிக்கன் போலவும், பார்பிகியூ சிக்கன் போலவும் சுட்டும், வேகவைத்தும் உண்கிறார்கள்.

பாகிஸ்தானிலும் வெட்டுக்கிளிகளை (ஹலால் முறையில்) பக்குவமாக சமைக்கப்பட்டு ஓட்டல்களில் பரிமாறியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டமாகவோ தனியாகவோ வெட்டுக்கிளியார் சென்றால், அதன் கால்களை பிய்த்து எரிந்துவிட்டு எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து சாப்பிட்டு வருகின்றனர்.

பார்ப்பதற்கு இறால் வருவல் போல இருக்கும் வெட்டுக்கிளி ஃபிரையை, சாப்பிடுவதற்கு என்றே ருசி தேடும் நாக்குடையோர் அந்த நாடுகளில் ஏராளமாக இருந்து வருகின்றனர்.

வெட்டுக்கிளி வந்தால் அதனை விரட்ட தகர தட்டுக்களை அடித்து ஒலி எழுப்புவதை விடுத்து, அதனை வறுத்துச்சாப்பிட எண்ணைய் சட்டிகளுடன் தயாராக இருக்கும் அந்த நாட்டு விவசாயிகள் அவற்றின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இலைகளையும் பயிர்களையும் தின்று புரோட்டின் ஊக்கியாக மாறியுள்ள வெட்டுக்கிளிகள் வட மாநிலத்தை விட்டு தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசும் , அதிகாரிகளும் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதரம் இழந்து தவிப்போரின் கையில் வெட்டுக்கிளிகள் கிடைத்தால் நிச்சயம் நம்ம ஊரிலும் வெட்டுக்கிளி ஃப்ரை வீட்டு வீட்டுக்கு தயாராகி விடும் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments