ஒவ்வொரு குடும்பத்திற்கும் 6 மாதங்களுக்கு தலா ரூ7500 வழங்க மத்திய அரசிடம் சோனியா காந்தி கோரிக்கை

0 1669

கொரோனோ மற்றும் ஊரடங்கால் பொருளாதார பாதிப்புக்கு மக்கள் ஆளாகி இருப்பதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும், அடுத்த 6 மாதங்களுக்கு, தலா 7500 ரூபாய் உதவித் தொகை வழங்குமாறு, மத்திய அரசை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஸ்பீக் அப் இந்தியா பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

எல்லா குடும்பங்களுக்கும் அவசர உதவியாக உடனடியாக 10000 ரூபாய் வழங்க வேண்டும், புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப உதவ வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என்பன மத்திய அரசுக்கு சோனியா காந்தி விடுத்துள்ள இதர கோரிக்கைகளாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments