20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருப்பம்

0 1345
2020ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டுக்கான  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 2021ம் ஆண்டில் நடத்த விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில்   நடத்த திட்டமிடப்பட்டுள்ள அப்போட்டி, கொரோனா பரவல் காரணமாக நடைபெறுமா என உறுதியாக தெரியவில்லை.

அப்போட்டி 2022ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், 2022இல் அப்போட்டியை நடத்த விரும்பவில்லை எனவும், 2021ம் ஆண்டில் நடத்த அனுமதிக்கும்படியும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் குழுவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின்  தலைவர் எர்ல் எட்டிங்ஸ் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

இருப்பினும் அதுகுறித்து  முடிவெடுக்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments