சிக்கிம் மாநிலத்தில் முதல் கொரோனா பாதிப்பு

0 1680

கடந்த 4 மாத காலமாக கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்த சிக்கிமில் முதல் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது. இருப்பினும், கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவுடன் தனது வடப்பகுதி எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில்,  டெல்லியில் இருந்து திரும்பிய 25 வயதுடைய தெற்கு சிக்கிமை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனை அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பூட்டியா உறுதிபடுத்தியுள்ளார். மேலும், தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments