உலக சுகாதார நிறுவன செயற்குழு தலைவராக தேர்வாகிறார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்

0 5223
உலக சுகாதார நிறுவன செயற்குழு தலைவராக தேர்வாகிறார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்

உலக சுகாதார நிறுவனத்தின் அடுத்த செயற்குழு தலைவராக சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நியமிக்கப்பட உள்ளார்.

நாளைமறுநாள் நடைபெறும் வாரியக் கூட்டத்தில் அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பரிந்துரைக்கு 194 உறுப்பினர் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் செயற்குழு கூட்டத்தை ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கி நடத்துவார். 34 உறுப்பினர்களை கொண்ட செயற்குழுவின் தலைவர் என்ற முறையில் உலக சுகாதார நிறுவன அசெம்பிளியின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments