கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐசிஎம்ஆர் பாராட்டு

0 1728
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டியுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பாராட்டியுள்ளது.

தலைமைச்  செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அக்கவுன்சிலை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநரும், கோவிட் 19 தேசிய பணிக்குழுவை சேர்ந்த முன்னணி உறுப்பினருமான மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

கொரோனா தடுப்பு சிகிச்சை, கொரோனா தடுப்புக்காக தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினர். அப்போது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments