கொரோனா புதிய உச்சம்... ஒடுக்கும் பணிகள் தீவிரம்

0 1662
கொரோனா புதிய உச்சம்... ஒடுக்கும் பணிகள் தீவிரம்

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சுமார் 37 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். அதேநேரம், முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 5 ஆயிரத்து 242 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இந்தியாவில், முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 242 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 157 பேர் பலி ஆகி உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 300 ஐ நெருங்கி வருகிறது.

புனேவில் ஒரே நாளில் 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில், 2 வது இடம் வகிக்கும் குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 400 ஐ நெருங்கி உள்ளது.

டெல்லியை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பீஹார், கர்நாடகா , ஜம்மு - காஷ்மீர் , ஹரியானா , ஒடிசா மற்றும் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் 56 ஆயிரத்து 316 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 36 ஆயிரத்து 624 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments