இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க விஜய் மல்லையா கடைசி முயற்சி

0 1140

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க விஜய் மல்லய்யா பிரிட்டனில் அடைக்கலம் நாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரிட்டன் சட்டப்படி ஒருவர் அடைக்கலம் கோரினால் அதுகுறித்த இறுதி முடிவெடுக்கும் வரை அவரை நாடுகடத்துவது கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்
ஏற்கனவே பலமுறை அவருடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடைசி கட்டமாக அவர் மீண்டும் அடைக்கலம் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி அவர் மனு தாக்கல் செயதிருந்தால் வழக்குத் தொடர்ந்த சிபிஐக்கு கூட கடைசி நிமிடம் வரை தெரிய வாய்ப்பு இருக்காது என்று லண்டனில் உள்ள இந்திய சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச் சென்ற மல்லயாவை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், மல்லய்யாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments