கணிசமாக சரிந்த கொரோனா சென்னையில் அதிகரிக்கும் டிஸ்சார்ஜ்

0 6680
சென்னையில் ஒரே நாளில் 332 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 300 ஐ நெருங்கி உள்ளது. கொரோனா காவு வாங்கிய 74 பேரில், சென்னையில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 332 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 300 ஐ நெருங்கி உள்ளது. கொரோனா காவு வாங்கிய 74 பேரில், சென்னையில் மட்டும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் கொரோனா நிலவரம் குறித்து, சுகாதாரத்துறை ஒவ்வொரு நாளும் கள நிலவரம் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்,

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 271 ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டில் 13 பேரும், திருவள்ளூரில் 10 பேரும் பாதிக்கப்பட, திருவண்ணாமலையில் 7 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

காஞ்சியில் 4 , கள்ளக்குறிச்சி மற்றும் மதுரையில் தலா 3 பேருக்கும் வைரஸ் தொற்றுஉறுதி ஆக, திண்டுக்கல், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தூத்துக்குடி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஆயிரத்து 202 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை, 5 ஆயிரத்து 17 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 970 பேர் , இதுவரை வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில், 12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 338 சிறுவர்கள் உள்பட 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 3 ஆயிரத்து 77 பெண்கள், 3 திருநங்கை கள் உள்பட மொத்தம் 9 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 277 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 758 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா காவு வாங்கிய 74 பேரில், 51 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டில் 4 பேரும் திருவள்ளூரில் 3 பேரும் கொரோனாவுக்கு இரை ஆக, மதுரை விழுப்புரம் மற்றும் தூத்துக்குடியில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

இதனிடை.யே, வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments