இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் நன்கொடை... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி நன்றி

0 1777
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் நன்கொடையாக அளிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவுக்கு மேலும் வலு சேர்க்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கு, அமெரிக்கா வென்டிலேட்டர்கள் நன்கொடையாக அளிக்கும் என அறிவிப்பதில் தாம் பெருமை கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி உருவாக்குவதிலும் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதாகக் கூறியிருந்த டிரம்ப், கண்ணுக்கு தெரியாத கொரோனா எதிரியை இணைந்து முறியடிப்போம் என தெரிவித்திருந்தார்.

இதற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாம் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக கூட்டாகப் போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தலா 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 200 மொபைல் வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு விமானம் மூலம் அமெரிக்கா அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments