திங்கட்கிழமை முதல் தளர்வுக்கு தயாராகும் மாநிலங்கள்..!

0 9689

நாடு முழுவதும் நான்காவது முறையாக திங்கட்கிழமை முதல் இம்மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு வகையான தளர்வுகளை மாநில அரசுகள் கோரியுள்ளன.இதனால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கவும் வாய்ப்புள்ளது.

மார்ச் மாதம் 23ம் தேதி அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு மூன்று கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு அதன் இறுதி நாளான நாளையுடன் முடிவடைகிறது. ஆயினும் நான்காம் கட்ட ஊரடங்கை நீட்டிக்க மத்திய மாநில அரசுகள் உடன்பாடு கொண்டுள்ளன. முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி நான்காம் கட்ட ஊரடங்கு வேறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொழில், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. அதன் வழிகாட்டல்களை எதிர்பார்த்திருக்கும் மாநில அரசுகள் பல்வேறு பரிந்துரைகளையும் உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளனர்.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் . பாதிப்பில்லாத பகுதிகளில் சுதந்திரமான நடமாட்டம் வேண்டும் சுற்றுலாவையும் படிப்படியாக தொடங்க வேண்டும். பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் மாநில அரசுகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு ஆரஞ்சு பச்சை மண்டலங்கள் பிரிவினையை கைவிட பஞ்சாப் மாநில அரசு தயாராக உள்ளது. பேருந்து போக்குவரத்தைத் தொடங்கவும் அம்மாநில அரசு முனைப்பு கொண்டுள்ளது .கர்நாடக அரசு உணவகங்களில் அமர்ந்து உண்பதையும் அனுமதிக்க கோரியுள்ளது.

கொல்கததாவில் மீண்டும் மஞ்சள் கோடிட்ட டாக்சிகளை இயக்க மம்தா அரசு கோரியுள்ளது. 20 பயணிகளுடன் பேருந்துகளை இயக்கப்போவதாகவும் கொல்கத்தா மாநகராட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன. திங்கட்கிழமை முதல் இயல்பு வாழ்க்கை முழு அளவில் இல்லையாயினும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் கணிசமான தளர்வுகளுடன் இருக்கும் என்றே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments