ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா... பூமி பந்தில் மிரளும் உலக சமூகம்

0 2954

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தொற்றுநோய்க்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு, ஒரே நாளில் 1,715 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 87 ஆயிரத்தை நெருங்கி விட்டது.ரஷியாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 2 ஆயிரத்து 300 ஐ தாண்டி விட்டது.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 428 பேர் பலி ஆனதால் உயிரிழப்பு 33 ஆயிரத்து 600 -ஐ தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 446 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, மற்றொருபக்கம் 835 பேர் பலி ஆனதால், மொத்தம் உயிரிழப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 808 பேருக்கும், சவுதி அரேபியாவில் 2 ஆயிரத்து 39 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது .

ஸ்பெயினில் ஒரே நாளில் ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட, மெக்சிகோவில் ஆயிரத்து 862 பேரும், கத்தாரில் ஆயிரத்து 733 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பாகிஸ்தான், கத்தார், வங்கதேசம், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்தது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில்,கடந்த 24 மணி நேரத்தில் 3 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி
ஆனது. அதேபோல, 3 பேர் மட்டுமே அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்து 3 ஆயிரமாக உயர, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.சுமார் 46 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 17 லட்சத்து 3 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

இதனிடையே, எய்ட்ஸ் போல கொரோனா வைரஸூம் மக்களை விட்டு வெளியேறப்போவது இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments