அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59ஆக அதிகரிக்கும் உத்தரவு குறித்து விளக்கம்

0 2356

அரசு ஊழியர்களின் ஓய்வு  வயது 58லிருந்து 59ஆக அதிகரிக்கும் உத்தரவு, மே 1 அன்றோ அல்லது அதற்கு முன்போ 58 வயதானோருக்கு பொருந்தாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

கடந்த 7ம் தேதி  வெளியிடப்பட்ட உத்தரவு குறித்து கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளித்துள்ளது. அதில் மே 1 அன்றோ அல்லது அதற்கு முந்தைய நாள்களிலோ 58 வயதானோருக்கும், ஓய்வுபெற்றநிலையில் மீண்டும் பணிநீட்டிப்பானோருக்கும் உத்தரவு பொருந்தாது எனவும், மே மாதத்துடன் ஓய்வுபெறும்போதும் கல்வியாண்டு முழுவதும் பணிநீடிப்பு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்ற கல்வி பயிற்றுநர்களுக்கும் பொருந்தாது எனவும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சில பதவிகளுக்கு ஓய்வு வயது 60ஆக இருப்பது அப்படியே நீடிக்கும் எனவும், அந்த வயது  61ஆக உயர்த்தப்படாது எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments