சிங்கப்பூரில் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்க திட்டம்

0 1451

சிங்கப்பூரில் வெண்டிங் இயந்திரம் மூலம் உடனடியாக முகக்கவசங்கள் செய்து விநியோகிப்பதற்கான பணியை ரேசர் நிறுவனம் தொடங்கி உள்ளது.

அந்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஊடங்கில் தளர்வு அளிக்கப்பட உள்ளதால், மால்கள், தொழில்நிறுவனங்களில் 20க்கும் மேற்பட்ட முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை வைக்க விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ரேசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த இயந்திரங்கள் மூலம் முதற்கட்டமாக 50 லட்சம் முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments