கொரோனா விவகாரத்தில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்குடன் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுடன் அமெரிக்கா முக்கிய விவாதம்

0 12407

கொரோனா விவகாரத்தில் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்குடன் இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுடன் அமெரிக்கா முக்கிய விவாதம் நடத்தியுள்ளது.

கொரானாவில் பல உண்மைகளை மறைத்ததாக தொடர்ந்து சீனாவை குற்றஞ்சாட்டி வருகிறது அமெரிக்கா. அதே நேரத்தில் சீனாவின் சர்வதேச வர்த்தக உறவுகளையும் மறுபரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் காணொலி விவாதம் நடத்தினார்.

அப்போது சீனாவுக்கு மாற்றாக இதர நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. 

பொருளாதார பாதிப்புகளை எப்படி கையாளுவது உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இணையம் வழியான புதிய ராஜீய உறவு என வர்ணிக்கப்படும் இந்த ஆலோசனையில் ,வர்த்தக தேவைகளுக்கு சீனாவை மட்டும் இனி நம்பி இருக்க வேண்டாம் என விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments