கைதிகள் இடையே கொரோனா பரவுவதை தடுக்க 50 சதவீத கைதிகளை விடுவிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு

0 972

சிறை கைதிகள் இடையே கொரோனா நோய் பரவாமல் தடுக்க சிறைகளில் அடைபட்டுள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளில் 50 சதவீதம் பேரை தற்காலிக ஜாமீனில் மகாராஷ்டிரா அரசு விடுவிக்கவுள்ளது.

நாட்டிலேயே கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழுகிறது. இந்நிலையில் மும்பை ஆர்தர்தோடு மத்திய சிறையில் அண்மையில் கைதிகள் 184 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, கைதிகள் இடையே கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின்கீழ் கைதானோரை தவிர 50 சதவீத கைதிகளை தற்காலிக ஜாமீனில் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments