டாஸ்மாக் கடைகள் திறப்பு.. குடிமகன்கள் கொண்டாட்டம்..!

0 2534
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். ஒரு சில இடங்களில் கொண்டாட்டங்களும் களைகட்டின.

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். ஒரு சில இடங்களில் கொண்டாட்டங்களும் களைகட்டின.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மதுபானக்கடை முன்பு காலை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்த மதுபிரியர்கள் கடை திறக்கப்பட்டவுடன் ஆதார் அட்டையை காண்பித்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

 

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், சென்னையை சேர்ந்த ஏராளமானோர் படையெடுத்ததால் திருவள்ளூர் கவரப்பேட்டை பகுதியிலுள்ள 2 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே டாஸ்மாக் முன்பு காலை முதலே வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், கடையை திறக்க வந்த விற்பனையாளரை கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

திருப்பூர் எம்.எஸ். நகர் பகுதியில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை மதுபிரியர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

 

காஞ்சிபுரத்தில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் முன்பு காத்திருந்த மதுபிரியர்கள், வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்காக மரக்கிளைகளை ஒடித்து குடையாக பிடித்திருந்தனர்.

ராஜாஜி மார்க்கெட் பகுதி டாஸ்மாக் கடையில் 5 கி.மீட்டர் தூரத்துக்கும், வெள்ளைக்குளம் பகுதி டாஸ்மாக்கில் 2 கி.மீ தூரத்துக்கும் கூட்டம் வரிசையில் காத்திருந்தது.

ஈரோட்டில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தடுப்புகள் அமைக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றது.

 

மதுரை பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள மதுபான கடையில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். மது வாங்க ஆதார் அட்டையுடன் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட வண்ண அனுமதி அட்டையும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

 

சேலத்தில் டாஸ்மாக் முன்பு 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து குடிமகன்கள் மது வாங்கி சென்றனர்.

 

கடலூரில் மாலை 5 மணியுடன் டாஸ்மாக் கடை மூடப்பட்ட பின் காத்திருப்பவர்கள், நாளை காலையில் வரும்போது முன்னுரிமை அளிக்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments