சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு....

0 2587

தமிழகத்தில் சென்னை மற்றும் குறிப்பிட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில், இன்று முதல்  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. 

கொரொனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த மார்ச் 24ந் தேதி மாலை 6 மணி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் அங்கு செல்வதை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதாக கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், நோய்த்தொற்று பதிப்பு அதிகம் இருப்பதன் காரணமாக சென்னையில் முழுமையாகவும் அதை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியை வலியுறுத்தி ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட தடைவிதித்து, மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வாரியாக மக்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மதுபானங்கள் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதுபானக்கடை முன்பாக 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் வலியுறுத்தலின் பேரில், ஆன்லைனில் மதுபானம் வாங்குபவருக்கு மூன்று நாள் இடைவெளியில் 750 மில்லி அளவில் அதிகபட்சம் இரண்டு பாட்டில்களும், நேரில் பணம் செலுத்தி வாங்குபவர் என்றால் 750 மில்லி அளவில் ஒரு பாட்டில் மட்டுமே வழங்கப்பட உள்ளது. மது வாங்க வருபவர்கள் கட்டாயம் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர்கள் புறநகர்ப்பகுதிக்கு சென்று மதுவாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments