கொரோனா தாக்கிய டிக்டாக் வைரஸ் புள்ளீங்கோ..! டச் ஃபோனால் 3 பேருக்கு இட்ச்..!

0 10046

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் , கொரோனா சிகிச்சை வார்டில் இருந்து கொண்டு டிக்டாக் செய்து வருவதாக மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விலகி இருக்காமல் பெண் புள்ளீங்கோ செய்யும் அட்டகாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

அரியலூரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் படுத்து கிடந்து டிக்டாக்கில் சோக கீதம் இசைத்து கொண்டிருக்கும் இந்த பெண்புள்ளீங்கோ பூஜா ..!தன் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனில் தான் டிக்டாக் செய்து பதிவிட்ட வீடியோவை, தன்னை கவனிக்க வந்த 3 சுகாதாரப் பணியாளர்களிடம் கெத்தாக காட்டி, செல்போன் மூலமாக அந்த 3 பேரையும் கொத்தாக கொரோனாவிடம் மாட்டிவிட்ட மகாராணி தான் இந்த பூஜா..!

அந்த 3 பேருக்கும் பூஜாவின் செல்போன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை பணியிடை நீக்கம் செய்ததோடு, 3 பேரும்
தனி அறையில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு டிக்டாக் தான்.. அத தொட்ட 3 விக்கெட்டும் க்ளோஸ் ..! என்பது போல சூப்பர் ஸ்பிரட்டராக தனியறையில் வலம் வரும் இந்த கொரோனா பேபியின் ஆட்டமும் அலும்பும் வெண்டிலேட்டர் வைத்த நிலையிலும் அடங்கவில்லை என்கின்றனர் மருத்துவர்கள்

அடுத்தடுத்து டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு மேடம் பாக்குறீங்களா... சிஸ்டர் பாக்கிறீங்களா... என்று கேட்டு சுகாதார பணியாளர்களை தெறித்து ஓட வைத்து வருகின்றார் பூஜா..! என்று குற்றஞ்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

கொரோனா பற்றிய துளியும் கவலையும் இன்றி, சைனா போறவன் தனியா போகமாட்டான் என்பது போல, தனக்கு துணைக்கு மேலும் சிலரை சேர்க்கும் முயற்சியாக இவரது செயல்பாடுகள் பார்க்கப்பட்டாலும், வலி நிறைந்த தன்னுடைய தனிமையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள பூஜாவுக்கு டிக்டாக் துணையாக இருக்கிறது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்..!

அரசு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு பூரண குணமடைந்து பூஜா அக்னி சிறகாய் வெளிவந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்..! அதைவிடுத்து குரங்கு வச்சிருக்கிறவன் கையும், செல்போன்ல டிக்டாக் வச்சிருக்கிற பெண்ணும் ஒன்று என்பது போல தனது செல்போனை வைத்து டிக்டாக் காட்டுகிறேன் என்று மேலும் சிலரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிக்கவைக்காமல் பூஜா விலகி இருக்கவேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments