கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓலா ஷேர் சேவை தற்காலிக நிறுத்தம்

0 807

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, “ஓலா ஷேர்” சேவைக்கு அந்நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

முன்னணி கால் டாக்சி நிறுவனங்களில் ஒன்றான ஓலாவில் வழங்கப்படும் ஓலா ஷேர் சேவையில், தனித்தனியாக புக்கிங் செய்த ஒன்றுக்கும் மேற்பட்ட தனி நபர்கள் ஒரே நேரத்தில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓலா ஷேர் சேவையை அந்நிறுவனம் காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளது. ஓலாவில் மைக்ரோ, மினி மற்றும் பிரைம் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments