கால் டாக்சி பயணம் உஷார்..!

0 3871

கொரோனா பரவாமல் தடுக்க தனியார் கால் டாக்சி நிறுவனங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவும் மக்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது. இந்த சூழலில் வெளியே செல்ல வேண்டிய தேவை உள்ள பலர், பொதுப் போக்குவரத்திற்கு பதிலாக தனியார் கால் டாக்சி நிறுவனங்களின் சேவையை நாடி வருகின்றனர்.

Ola, Uber போன்ற கால் டாக்சி நிறுவன வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துவதால், அதில் பயணிப்பவர்களில் யாருக்கேனும் தொற்று இருந்தால் மற்ற பயணிக்கும் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆனால் தனியார் கால் டாக்சி நிறுவனங்கள் எந்தவித சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வேளையில் தான், தனியார் கார் நிறுவனமா Fast Track தனது வாடிக்கையாளர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த வாடிக்கையாளர்களை காரில் ஏற்றுவதற்கு முன்பாக கிருமிநாசினியைக் கொண்டு காரில் வாடிக்கையாளர்கள் கைவைக்கக் கூடிய இடங்களை சுத்தம் செய்ய ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது...

Fast Track நிறுவனம் மட்டுமல்லாது அனைத்து தனியார் கால் டாக்சி நிறுவனங்களும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கி ஒவ்வொரு வாடிக்கையாளரையும் காரில் ஏற்றுவதுக்கு முன் வாகனத்தை சுத்தம் செய்யும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். இதனை அரசு கண்காணித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments