அடிக்கடி தொடும் இடங்களை எவ்வாறு கிருமிநீக்கம் செய்வது?

0 1734

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நாம் அடிக்கடி தொடும் இடங்களை எவ்வாறு கிருமிநீக்கம் செய்வது என்பது குறித்து சில எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

அதன்படி வீட்டிலுள்ள இடங்களை நீர் மற்றும் சோப்பு கலவை மூலம் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டு உபயோகத்திற்கான பீளிச்சினை, நீரில் கலந்தும் உபயோகிக்கலாம். 4 கிண்ணங்கள் அளவிலான நீரில் 5 தேக்கரண்டி பிளீச்சை கலந்தோ அல்லது 70 சதவீத ஆல்கஹால் உள்ள சேனிடைசர்களையோ பயன்படுத்தலாம்.

முதலில் சோப்புக் கலவை கொண்டு சுத்தப்படுத்திய பின்னர், கிருமிநாசினிகளை கொண்டு கிருமிநீக்கம் செய்ய வேண்டும். ஒரு கழிவறையில் உள்ளதை போல் 10 மடங்கு அதிக கிருமிகள் செல்போனில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், அவற்றையும் கிருமிநாசினிகள் கொண்டு துடைத்து பயன்படுத்துவது தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments