தொழிலில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது - ஜெயக்குமார்

0 408

தெற்கு வாழ்கிறது, வடக்கு வீழ்கிறது என அமைச்சர் ஜெயகுமார் பேரவையில் தெரிவித்துள்ளார்.

பேரவையில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலையும், தொழில் வளமும் இல்லை, அறிஞர் அண்ணா சொன்னது போல், வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என திமுக உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டம்-ஒழுங்கு, அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு முதலமைச்சர் செயல்படுவதாகக் குறிப்பிட்டார். தொழிலில் சிறந்த மாநிலமாகவும், சட்டம் ஒழுங்கு சரியான மாநிலமாகவும் தமிழகம் உள்ளது, மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேறியுள்ளது என அமைச்சர் கூறினார்.

ஆகவே அறிஞர் அண்ணா தற்போது இருந்திருந்தால் தெற்கு வாழ்கிறது - வடக்கு வீழ்கிறது எனக் கூறி இருப்பார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments