சீனத் தூதரை கடிந்துகொண்ட அமெரிக்கா

0 3052

கொரானா வைரஸ் தொற்றை சீனாவுக்கு கொண்டுவந்தது அமெரிக்க ராணுவமாக இருக்கலாம் எனக் கூறிய விவகாரத்தில் சீன தூதரை அழைத்து அமெரிக்கா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான சீன தூதர் Cui Tiankai-க்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியது.

அதன் பேரில் ஆஜரான சீன தூதரிடம், கொரானா தொடர்பான கருத்துக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து உலகளவில் கொரானா பரவியுள்ள நிலையில், இந்த உண்மையில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப சீனா முயற்சிப்பதாகவும், ஆதாரமற்ற சதிக் கோட்பாடுகளை அந்நாடு பரப்புவது மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments