கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் குறித்து அமைச்சர் விளக்கம்

0 643

சென்னை தாம்பரம், மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சை செங்கிப்பட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரானா கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு விமான நிலையங்களில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் வெயில் அதிகம் இருப்பதால் வைரஸ் பரவாது என்று கூறப்படுவது சரியான தகவல் இல்லை.

தற்போது 10 லட்சம் முக கவசங்கள் கையிருப்பு உள்ளதோடு, தேவையான மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார்நிலையில் உள்ளதாகவும் விஜயபாஸ்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments