பாஜகவிடம் இருந்தே சிவசேனா விலகியுள்ளது... இந்துத்துவாவில் இருந்து அல்ல - உத்தவ் தாக்கரே

0 838

பாஜகவிடம் இருந்தே சிவசேனா விலகியிருக்கிறது, இந்துத்துவாவில் இருந்து விலகவில்லை என்று அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றபிறகு, முதன்முறையாக அயோத்திக்கு இன்று அவர் வந்தார். பின்னர் அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் பேசிய அவர், பாஜக ஒன்றும் இந்துத்துவாவின் தனி அதிபதி கிடையாது என்றும், இந்துத்துவா அரசியலில் இருந்து சிவசேனா விலகவில்லை என்றும் உத்தவ் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக மகாராஷ்டிர மாநில அரசு ஒரு கோடி ரூபாய் வழங்கும் என்றும் உத்தவ் தாக்கரே அறிவித்தார். அயோத்தியில் ஆரத்தி எடுக்க உத்தவ் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரானா அச்சம் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments