2 மகன்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு லாரி ஓட்டுநர் தற்கொலை

0 806

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவி இறந்த துக்கத்திலும் 2 மகன்களை கவனிக்க முடியாத சூழலிலும் மகன்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரின் மனைவி இந்துமதி 6 மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்துபோயிருக்கிறார். லாரி ஓட்டுநரான சுந்தருக்கு 13 வயதில் சுனில் என்ற மகனும் 9 வயதில் விமல் என்ற மகனும் இருந்தனர். லாரி ஓட்டுநர் என்பதால் காலையில் வேலைக்குப் போய் நள்ளிரவில் வீடு திரும்புவதுமாக அவரது நிலை இருந்துள்ளது.

சமயங்களில் வெளியூர், வெளி மாநிலம் செல்லும் நிலையும் இருந்ததால் மகன்களை கவனிக்க முடியாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை நீண்ட நேரம் பூட்டிக்கிடந்த அவரது வீட்டை திறந்து பார்த்தபோது, மகன்களுக்கு வாழைப்பழத்தில் குருணை மருந்தை கலந்து கொடுத்து கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments