200 மாநகராட்சி ஊழியர்களின் சம்பளப் பணம் மோசடி செய்யப்பட்டது

0 272

டெல்லியில் 200க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களின் வங்கிக்கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் செய்யப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தொழியாளர் யூனியன் சார்பில் நியு டெல்லி முனிசிபல் கார்ப்பரேசன் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் மூலமாகவும் ஏடிஎம்களின் மோசடி மூலமாகவும் பணத்தை பறிகொடுத்ததாக 200 ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான பணம் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்துதான் கையாடல் செய்யப்பட்டுள்ளது. போலியான டெபிட் கார்டுகளை தயார் செய்து பணத்தை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments