நகைத் திருட்டு நாடகமும், தற்கொலையும்..!

0 276

ராமநாதபுரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை சரிகட்ட தன் வீட்டு நகையையே எடுத்து வங்கியில் அடமானம் வைத்துவிட்டு, யாரோ திருடிவிட்டதாக நாடகமாடிய நபர் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்றாங்கரை பகுதியைச் சேர்ந்த குத்புதீன் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் இருந்த 126 சவரன் நகைகள் திருடுபோய்விட்டதாக போலிசில் புகாரளித்திருந்தார்.

விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, வீட்டுக்குள் திருடர்கள் வந்து போனதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் குத்புதீன் வீட்டினர் மீதே அவர்களின் சந்தேகம் திரும்பியது.

போலீசாரின் விசாரணைப் பிடி இறுகிய நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கடையை உறவினர்கள் சுத்தம் செய்தபோது அங்கு நகைகளை அடமானம் வைத்தற்கான ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட மனைவிக்குத் தெரியாமல் நகைகளை எடுத்து அடமானம் வைத்துவிட்டு, திருடுபோனதாக நாடகமாடிய குத்புதீன், விசாரணையில் குட்டு வெளிப்பட்டு விடுமோ என அஞ்சி, தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

நகைகள் காணாமல் போனதாக புகார் அளிப்பதற்கு முன்பாக, குத்புதீனின் உறவினர்கள் அவரது பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் கொண்டு அவரை அடித்து துவைத்த கூத்தும் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments