ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் இந்திய காவலர் வீரமரணம்

0 1629

ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று அதிகாலையில் ஜம்முவின் சர்வதேச எல்லை அருகே உள்ள சம்பாவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் தலைமைக் காவலர் லால் ஃபர்ன் கிமா என்பவர் வீரமரணம் அடைந்ததாகவும்  இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, பாதுகாப்புப் படையினர் தகுந்த பாடம் புகட்டியதாக BSF இன் இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments