ஆந்திராவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தலைமை காவலர்

0 1917

ஆந்திராவில், கைத்துப்பாக்கியால் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளை சுட்டுக் கொன்ற தலைமை காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடப்பா நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வெங்கடேஸ்வரலு, நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற நிலையில், வீட்டிலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் அங்குச் சென்று விசாரணை நடத்திய போது, அவரது பொறுப்பில் இருந்த அதிகாரியின் கைதுப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து இந்த விபரீதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து அவர் பத்திரத்தில் எழுதி வைத்திருப்பதை கைப்பற்றி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments