"முதன்முறையாக பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உரிய மரியாதை பெறுகின்றனர்" - பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவில் முதன்முறையாக தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் தாங்கள் நியாயமாகப் பெற வேண்டிய மதிப்பையும் மரியாதையையும் பெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச நகரான சாகரில் ஆன்மீகவாதி ரவிதாஸ் நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ரயில் மற்றும் சாலைத் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது பேசிய பிரதமர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமது அரசுசெயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
Comments