கறுப்புப் பணம் பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.. வெளிநாடுகளில் தி.மு.க.வினரின் கறுப்புப் பணமே அதிகம் - அண்ணாமலை

0 2128
கறுப்புப் பணம் பற்றி பேச உதயநிதிக்கு தகுதி இல்லை.. வெளிநாடுகளில் தி.மு.க.வினரின் கறுப்புப் பணமே அதிகம் - அண்ணாமலை

கறுப்பு பணத்தை பற்றி பேசுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலை ஜிம்கானா கிளப்பில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அண்ணாமலை இதனை தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையையும் நீதிபதிகளையும் பணி செய்ய விட்டால், செந்தில் பாலாஜி மொரிஷிசியஸ் நாட்டில் பதுக்கி வைத்துள்ள பணம் முழுவதும் மீட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் ஒரு பக்கத்தில் தமிழர்களின் உரிமை களவு போய்க் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, மறுபக்கம் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிய பிறகும் முதலமைச்சர் ஏன் கர்நாடகா செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments