தெலுங்கானாவில் பரபரப்பு... பட்டப்பகலில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த பொதுமக்கள்...!

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்ய முயன்ற மூவரை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
சூர்யாபேட் நகரில் பண்டி, மகேஷ்,சன்னி ஆகியோர் சேர்ந்து சந்தோஷ் என்பவரை கத்தியால் கடுமையாக தாக்கினர். பின்னர் பெரிய கல் ஒன்றை எடுத்து சந்தோஷ் மீது போட முயன்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் போராட்டமே நடைபெற்றது.
நிலைமை விபரீதம் ஆகிவிடும் என்று கருதி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை கூட விட்டு விட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த சந்தோஷை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பண்டியை கொலை செய்யும் முயற்சியில் சந்தோஷ் உட்பட இருவர் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்ததாகவும், புகாரை வாபஸ் பெற பண்டியை சந்தோஷ் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பண்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷை கொல்ல முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments