''முறையாக அனுமதி பெற்ற குவாரிகளுக்கு மூடுவிழா காண துடிக்கும் திமுக..'' - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் குவாரிகளை ஆய்வு செய்து, குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அனைத்து குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் குவாரி அனுமதி வழங்க வேண்டும், குவாரி உரிமங்கள் விரைவாக புதுப்பித்துத் தர நடவடிக்கை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Comments