உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை..!

அமெரிக்காவில், உணவு கொண்டுவந்த டெலிவரி பாய் கண்டந்துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஃபுளோரிடாவை சேர்ந்த ரண்டால் கூக், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணியாற்றி வந்தார். கடந்த 19ந்தேதி கடைசி டெலிவரியை முடித்து விட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூக் தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் கூக் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த மனைவி உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, கடைசியாக கூக் டெலிவரி செய்து விட்டு லாக் ஆஃப் செய்த லொகேஷனை அந்நிறுவனம் வழங்கியது. புகாரின்பேரில், கூக் கடைசியாக டெலிவரி செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆஸ்கர் சோலிஸ் என்பவர், கூக்-கை கொலை செய்து, அவரது உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி பையில் அடைத்து குப்பையில் வீசியது தெரியவந்தது.
Comments