11-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

0 1505

11-ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் தியாகப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சதிஷ். மின் பணியாளரான இவருக்கும் சிதம்பரம் அடுத்த சிவபுரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய சதீஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி உத்தமராஜா, சதீசுக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments