விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்..!

0 1204

மதுரை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக அனுப்பிவைக்கப்பட்டன.

மதுரை சமயநல்லூரை சேர்ந்த கார்த்திகா என்பவர் தனது இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதியன்று வேலை பார்க்கும் இடத்திற்கு, மகனுடன் இருசக்கர வாகனத்தில் கார்த்திகா சென்ற போது தேனூர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில், கார்த்திகாவின் கல்லீரல், கண், சிறுநீரகம், நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகள் மதுரை மற்றும் நெல்லையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தானமாக அளிக்கப்பட்டன.

உடல் உறுப்புகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், நெல்லை அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஆம்புலன்ஸ்கள் எளிதாக செல்ல போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments