''அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்த புகைப்படத்தை பார்த்து அசந்து போனேன்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு..!

அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ புலிவாலை பிடித்த படத்தை பார்த்து அசந்து போனதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
எந்த தொழிலும் இல்லாத நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் வந்து என்ன செய்ய? மக்கள் பாராட்டும் வகையில் தொழிலை கொண்டு வாருங்கள் என கேள்வி நேரத்தின்போது செல்லூர் ராஜூ பேசினார்.
அதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, செல்லூர் ராஜு புலி வாலை பிடித்ததுபோல வெளியான படத்தை சுட்டிக்காட்டி, அவரை மதுரை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களே பாராட்டுவதாக கூறினார்.
மேலும், மதுரைக்காரர்கள் விவரமானவர்கள் என்பதற்கு சான்றாக, புலியின் வாய் பக்கம் நிற்காமல், அதன் வால் பக்கம் நின்ற திறமையானவர் என கூறியதால், அவை சிறிது நேரம் கலகலப்பானது.
Comments