''சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..'' - டிஜிபி சைலேந்திரபாபு..!

சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு, காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட வழக்குகளில் இதுவரையில், 43 ஆயிரத்து 509 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளதாகவும் டிஜிபி கூறினார்.
Comments