மருது பாண்டியர்கள், கட்டபொம்மன் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலை, மற்றும் வ.உ.சிதம்பரனார் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், கோவை சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டு காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளதையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
Comments